’டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதாரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், மார்ச் 25 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதே தேதியில் லைகா நிறுவனம் வெளியிடும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக, அப்படக்குழு அறிவித்தது.
இதன் காரணமாக, ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்ததால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், ‘டான்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு இன்று காலை அறிவித்தது. அதன்படி, வரும் மே 13 ஆம் தேதி ‘டான்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...