Latest News :

கல்லூரி மாணவர்களின் அரசியலை பேசும் ‘இயல்வது கரவேல்’!
Monday March-14 2022

அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ்.ஹென்றி இயக்கத்தில், கதிர் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘இயல்வது கரவேல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எமினெண்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் தயாரிக்கும் இப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்‌ஷ்மி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு. பழனியப்பன், ஆடுகளம் நரேன், ஸ்மைல் சேட்டை  அன்புதாசன், லகுபரன் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, மாயப்பாண்டி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். தியாக படத்தொகுப்பு செய்ய, மக்கள் தொடர்பாளராக ரியாஸ் கே.அஹ்மத் பணியாற்றுகிறார்.

 

முழுக்க முழுக்க கல்லூரியை கதைக்களமாக கொண்ட இப்படம், சென்னையில் உள்ள பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை மையமாக வைத்து உருவாகிறது.

 

இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படத்தின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி தொடர்ந்து திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வடசென்னை பகுதிகளில் நடைபெற உள்ளது.

Related News

8071

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery