பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்கு ‘மாமன்னன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. அதற்கு காரணம், இப்படம் தான் உதயநிதி நடிக்கும் கடைசி திரைப்படம் என்றும், இப்படத்திற்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடவும் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் படத்திற்கு ‘மாமன்னன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் 15 வது திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத, சாண்டி நடனம் அமைக்கிறார். குமார் அகங்கப்பன் கலையை நிர்மாணிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...