தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவான பாலா, மனைவியை பிரிந்துள்ளார். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலா - முத்துமலர் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில், இயக்குநர் பாலா மனைவியை பிரிந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக இயக்குநர் பாலாவு, முத்துமலரும் மனதளவில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று சுமூகமான முறையில் பிரிந்துள்ளார்கள்.
மனைவியைப் பிரிந்தாலும் மகள் பிரார்த்தனாவை தன்னுடனே வைத்துக்கொண்டிருக்கிறார் பாலா. சட்டப்பூர்வ அனுமதியுடன் மகளைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...