கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றி பெற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருப்பதோடு, பிற மொழி திரையுலகிலும் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளார். இதனால், இவர் நடிக்கும் படங்கள் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் ஒன்று மகளிர் தினமான நேற்று (மார்ச் 8) பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி எண்டர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் பல திருப்பங்கள், சண்டைக்காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் தொடங்கியது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...