ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதும். தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேபோல், தனுஷ் - ஐஸ்வர்யா பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டும், என்று நினைக்கும் பலர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், தனுஷ் அவருடைய பணியில் பிஸியாக இருப்பது போல், ஐஸ்வர்யாவும் தனது பணியில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வதற்காக, வீடியோ இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அதில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சிம்புக்கும் - தனுஷுக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக வெளியான தகவலால் கோடம்பாக்கம் பரபரப்பாகியுள்ளது.
‘மாநாடு’ வெற்றியை தொடர்ந்து சிம்புவை வைத்து படம் இயக்க பல முன்னணி இயக்குநர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சிம்புவை வைத்து படம் தயாரிக்க விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால், இவர்களுக்கு எல்லாம் கால்ஷீட் கொடுக்காத சிம்பு, ஐஸ்வர்யா ரஜினிக்கு எப்படி கால்ஷீட் கொடுப்பார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், தனது முன்னாள் தோழி என்பதால் ஐஸ்வர்யா ரஜினிக்கு சிம்பு நிச்சயம் கால்ஷீட் கொடுப்பார், என்ற பேச்சும் அடிபடுகிறது.
இந்த தகவல் வதந்தியா அல்லது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை என்றாலும், இந்த தகவல் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...