’வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் படம் ‘ரேக்ளா’. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படம் பிரபுதேவாவின் 58 வது திரைப்படமாக உருவாகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டராக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் கதிரேசன், சி.வி.குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி, கோபி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...