ரஜினியின் 169 வது படத்தை, நெல்சன் இயக்குகிறார் என்ற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன், விஜயை வைத்து இயக்கியிருக்கும் ‘பீட்ஸ்’ படத்தின் பாடல் வைரலாகி வரும் நிலையில், படம் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ரஜினியின் 169 வது படத்தை இயக்குவதாக பல இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், யாரும் எதிர்ப்பாராத வகையில், நெல்சன் தேர்வானார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா மோகன், ’டான்’ படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியான நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார்.
தற்போது அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை மட்டுமே ஓகே செய்து வருகிறாராம். அந்த வகையில், ரஜினியின் 169 வது பட வாய்ப்பு கிடைத்தவுடன் சட்டென்று சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...