இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பரத், நடிக்கும் 50 வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
திரில்லர் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
’லுசிபர்’, ’மரைக்காயர்’, ’குருப்’ உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான்னி ரபேல் இசையமைக்கிறார். அஜய் மனோஜ் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கசம்பு கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மிக பிரமாண்டமான முறையில் உருவாகும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஆர்.பி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.பாலா மற்றும் கெளசல்யா பாலா தயாரிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...