’மாயா’, ’மான்ஸ்டர்’, ’மாநகரம்’ உள்ளிட்ட பல தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன்.ஆர் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாணாக்காரன் ’.
தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும். இப்படத்தின் கதைக்களம் 1998 ஆம் ஆண்டு நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி நாயர் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் தமிழ், காவல்துறையில் பணியாற்றி பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு, இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். மேலும், ‘ஜெய் பீம்’ படத்தில் எதிர்மறை காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...