செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகும் படம் ‘பேட்டரி’. மணிபாரதி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படமான இப்படத்தின் கதை மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில், தனது காதலை நாயகனிடம் தெரிவிக்க, அவரோ கொலை வழக்கு ஒன்றின் தீவிரத்தால், காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். இதனால் மனம் உடைந்த அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.

கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் வரிகளில், ““நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே....என்னில் ஏதோ ஆனது நீதானே...காதலே நீதானே...பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா...“ என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையில், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்கள். கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது முடியும் தருவாயில் உள்ள ‘பேட்டரி’ படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...