விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது. அப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஆரம்ப வேலைகள் தற்போது தொடங்கியிருக்கிறது.
விஜயின் 66 வது திரைப்படமாக உருவாகும் அப்படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது. மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜயின் 66 வது படத்தில் அவருக்கு ஜோடியாக தென்னிந்திய சினிமாவின் வைரல் நாயகியாக உருவெடுத்துள்ள ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இதனை படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தார்.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...