சமந்தா நடிப்பில் உருவாகி வரும் பன்மொழித் திரைப்படம் ‘யசோதா’. கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தை ஹரி - ஹரிஷ் கூட்டணி இயக்க, ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.
இப்படத்திற்காக ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டல் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், இப்படம் பற்றிய மேலும் ஒரு தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘டிரான்ஸ்போர்ட்டர் 3’, ‘புரொஜெக்ட் 7’, ’பாரிஸ் பை நைட் டெட்’ ‘சிட்டி ஹண்டர்’, ‘இன்செப்ஷன்’ உள்ளிட்ட பல ஆங்கிலப் படங்களின் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றிய யானிக் பென், யசோதா படத்தில் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
சல்மான் கான், ஷாருக்கான், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோரது படங்களில் பணியாற்றியிருக்கும் யானிக் பென், சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் பணியாற்றியிருக்கும் நிலையில், யசோதா படம் மூலம் சமந்தாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...