தென்னிந்திய நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், நாசர் தலைமையில் ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக பாக்யராஜ் அணி தரப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தேர்தல் செல்லாது என்று அறிவித்ததோடு, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதனால், வாக்கு பெட்டிகள் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாசர் தலைமையிலான அணியின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகளை விரைவில் எண்ண வேண்டும், என்றும் உத்தரவிட்டது. மார்ச் 20 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே நாசர் தலைமையில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் முன்னிலையில் இருந்தனர்.
திடீரென்று பாக்யராஜ் தலைமையிலான அணியினர், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக நாசர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் மீண்டும் பொறுப்பேற்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...