அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், நானி நடித்திருக்கும் ஆக்ஷன் மற்றும் மாஸ் கமர்ஷியல் திரைப்படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படமாக தயாரிக்கிறார்.
இதில், நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.
முன்னோட்ட காட்சி துணுக்கில், நடிகர் நானி தனது கூட்டத்துடன் சிங்கரேணி சுரங்க பகுதியில் நடந்து வருகிறார். அவரது வித்தியாசமான முரட்டு தோற்றம் நம்மை மிரட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணனின் பின்ணனி இசை இக்காட்சிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதையில், நானி மாஸ் மற்றும் ஆக்சன் கலந்த அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு அழுத்தமான டிராமா திரைப்படமாக உருவாகும் ‘தசரா’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...