Latest News :

’கபாலி’ லிங்கேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘காலேஜ் ரோடு’! - பாராட்டிய பா.இரஞ்சித்
Monday March-21 2022

’கபாலி’ படத்தில் கோழிக்கறி என்று ரஜினிகாந்தை கலாய்க்கும் காட்சி மூலம் பிரபலமானவர் லிங்கேஷ். அப்படத்தை தொடர்ந்து ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தவர் ‘காலேஜ் ரோடு’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.

 

மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி த்ரில்லர், காமெடி கலந்த கதையமைப்போடு உருவாகியுள்ள இப்படத்தை  எம்.பி.எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார்.

 

பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

 

இந்த நிலையில், ‘காலேஜ் ரோடு’ படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், லிங்கேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியதோடு, மாணவர்கள் கல்விக்கடன் மற்றும் அதன் அரசியலையும், சமூக பிரச்சனையையும் பேசினாலும் படம் கமர்ஷியலாக இருக்கிறது. நிச்சயம் மாணவர்களுக்கு படம் பிடிக்கும், என்று கூறியிருக்கிறார்.

 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் பாராட்டால் உற்சாகமடைந்துள்ள ‘காலேஜ் ரோடு’ படக்குழுவினர் வெளியீட்டுக்கான பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Related News

8106

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery