Latest News :

மஹத் நடிப்பில் உருவாகும் வெப் தொடர் ‘ஈமோஜி’
Tuesday March-22 2022

பல படங்களில் நாயகனாக நடித்து வரும் மஹத் ராகவேந்திரா, நடிப்பில் ‘ஈமோஜி’ என்ற வெப் தொடர் உருவாகிறது. திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா?, இல்லையா? என்பதை மையப்படுத்திய உணர்வுபூர்பமான ஒரு  காதல் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது.

 

இதில் மஹத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக தேவிகா சதீஷ் மற்றும் மானசா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜே ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சென் எஸ்.ரங்கசாமி எழுதி இயக்கியுள்ள இந்த வெப் தொடரை ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.எச்.விக்ரம் இசையமைக்க, எம்.ஆர்.ரெஜீஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். வனராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

ஈமோஜி தொடரை  Sen. S. ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், R.H.விக்ரம் இசையமைப்பாளராகவும், M.R.ரெஜீஷ் படத்தொகுப்பாளராகவும், சந்தியா சுப்பவரபு ஆடை வடிவமைப்பாளராகவும், N.சந்திரசேகர் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

 

‘இருவர் ஒன்றானால்’ மற்றும் ‘பொற்காலம்’ ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.சம்பத், ‘ஈமோஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக தீனா, ரமணா படங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகவும், அமீர்கான் நடித்த கஜினி படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8108

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery