நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடக்கவில்லை என்றாலும், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்ததால், அந்நிகழ்வு குறித்து தமிழகமே பேசி வருகிறது.
தனக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது, ஆனால் ரஜினிகாந்துக்கு தெரியும், இருப்பினும் அதை எனக்கு அவர் சொல்லிக்கொடுக்க மாட்டார், அவருடன் வந்தால் தான் சொல்லிக்கொடுப்பார், என்று அவர் கூறுகிறார், என்று ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஜினிகாந்த்தின் புதிய அரசியல் கட்சி குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசியல் குறித்து கமலிடம் கேட்டிருந்தால், அதை அவர் எனக்கு சொல்லியிருப்பார், ஆனால் இப்போது எனக்கு அரசியல் குறித்து சொல்லிக்கொடுக்கும் மனநிலையில் அவர் இல்லை, என்று ரஜினி இன்றைய சிவாஜி மணிமண்டபம் நிகழ்வில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய ரசியல் கட்சியின் பெயரை ‘ரஜினிகாந்த் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே பெயரில் தொடங்கப்பட்ட இணையதளத்தில் பலர் தங்களது விபரங்களை பதிவு செய்து வருவதாகவும், அந்த இணையத்தில் கேட்கப்படும் விபரங்களை சரியாக கொடுத்த பிறகு, ரஜினிகாந்த் உங்களை விரைவில் நேரில் சந்திபபர் என்ற தகவல் வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...