தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்கள். தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பதவி ஏற்புக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்.
தவி ஏற்றுக்கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு, 65 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், சங்க தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத்தலைவர் ஈ.சுகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, சரணவன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...