ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை கே.பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான கே.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ‘ராசுக்குட்டி’ (1992) என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, சண்முக ராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...