Latest News :

ரூ.500 கோடியை கடந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ வசூல்!
Tuesday March-29 2022

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் மட்டும் இன்றி ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழ் பதிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டது. மேலும், விளம்பரத்தையும் மிக பிரம்மாண்டமான முறையில் செய்து வரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.223 கோடியை வசூல் செய்த இப்படம், தற்போது ரூ.500 கோடியை கடந்துள்ளது.

 

RRR

 

விடுமுறை நாட்கள் மட்டும் இன்றி வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடுவதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறைக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் படத்தின் கலெக்‌ஷன் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதால், நிச்சயம் ரூ.1000 கோடியை ‘ஆர்.ஆர்.ஆர்’ வசூல் செய்யும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்கள்.

Related News

8120

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery