தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் சமூக அரசியல் பேசும் படங்களை தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் வெளியாகும் படங்கள் சமூகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, புதிய முயற்சியாகவும் இருக்கிறது.
இதன் காரணமாக, பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்கள் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 5 வது தயாரிப்பின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
’ஜே.பேபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ், ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கும் இப்படம், நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான குடும்ப படமாக உருவாகிறது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ' ஜெ. பேபி ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...