Latest News :

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை கைப்பற்றிய உதயநிதி
Thursday March-31 2022

கமல்ஹாசன் நடித்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ஒடிடி மற்றும் தொலைக்காட்சி வெளியீட்டுக்கான வியாபாரம் மிகபெரிய அளவில் நடைபெற்றிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

 

கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ‘விக்ரம்’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி பெற்றிருப்பது எதிர்ப்பார்ப்பை  அதிகரிக்க செய்திருக்கிறது.

Related News

8128

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery