பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில், அப்போட்டியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் நடிகைகளுக்கு விளம்பரம், சினிமா என்று பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில், ஓவியா தான் டாப்.
போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டாலும், ஆரவை காதலித்து கடுப்பான ஓவியா, நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினாலும், அவருக்கு ரூ.5 கோடி கிடைத்திருக்கிறதாம். ஆனால், இதை கொடுத்தது விஜய் டிவி அல்ல, பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ்.
சரவணா ஸ்டோர் புதிய கிளையை திறக்கப் போகிறார்கள், என்று கூவி கூவி விளம்பரப் படுத்திய ஓவியா, அந்நிறுவனத்தின் மேலும் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ’காஞ்சனா 3’, ‘காட்டேரி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள ஓவியா, கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க உடனே ஓகே சொல்கிறார்களாம். அதே சமயம், தான் கேட்கும் சம்பள தொகையில் ஒரு ரூபாய் குறைந்தாலும், எதாவது காரணம் சொல்லி அந்த படத்தை ஓவியா நிராகரித்துவிடுகிறாராம்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...