Latest News :

இப்படி ஒரு படமா! - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் ‘பூ சாண்டி வரான்’!
Sunday April-03 2022

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட எத்தனையோ படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. ஆனால், எந்தவித ஆடம்பரமும் இன்றி, கதைக்களம் மற்றும் அதை படமாக்கிய விதத்திற்காக ஊடங்களின் பாராட்டையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று சத்தமில்லாமல் சாதிக்கும் சில படங்களும் அவ்வபோது வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

 

அந்த வகையில், சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான ‘பூ சாண்டி வரான்’ திரைப்படம் ஊடங்களின் பாராட்டை பெற்றதோடு, படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி ஈர்த்து வருகிறது.

 

முழுக்க முழுக்க மலேசிய தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி ரமணா நடித்திருக்கிறார். இவரை தவிர்த்து படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் லோகன், தினேஷ் கே.கிருஷ்ணா, கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள் என அனைவரும் மலேசிய தமிழ் கலைஞர்கள். 

 

படத்தை இயக்கியிருப்பவர் ஜே.கே.விக்கி, டிரையும் ஸ்டுடியோஸ் ஆர்பில் ஆண்டி தயாரித்திருக்கும் இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பூச்சாண்டி’ என்ற தலைப்பில் மலேசியாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

தற்போது தமிழ்நாட்டில் ‘பூ சாண்டி வரான்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ஊடகங்களும், ரசிகர்களும் படம் மற்றும் நடிகர்கள் குறித்து வெகுவாக பாராட்டி வந்தாலும், தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படத்திற்கு காலை காட்சி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு பலருக்கு கிடைக்காமல் போவதை எண்ணி படக்குழு சற்று கவலை அடைந்துள்ளது.

 

இந்த நிலையில், சென்னை ரோஹினி தியேட்டரில் ‘பூ சாண்டி வரான்’ படத்திற்கு நாளை (ஏப்ரல் 4) மாலை காட்சி, அதாவது மாலை 7 மணி காட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் தியேட்டருக்கு மக்கள் அதிகமானோர் வருவார்கள், அப்படி வந்து தங்களது படத்தை பார்த்தால், அவர்களது பாராட்டு காரணமாக படத்துக்கு மவுத் டாக் நிச்சயம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கையோடு இருக்கிறது.

 

மேலும், இந்த படம் திகில் படமாக தொடங்கி, சரித்திர பின்னணியில் இதுவரை நாம் அறியாத ஒன்றுக்கு எளிமையான ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறது.  ‘பூ சாண்டி வரான்’ படத்தை பார்ப்பவர்கள் அப்படத்தால் வியப்படையாமல் இருக்கவும் முடியாது, படத்தை பாராட்டாமலும் இருக்க முடியாது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

Related News

8132

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery