Latest News :

வைரலாகும் ‘மஹா வீர்யார்’ டீசர் ! - மகிழ்ச்சியில் நிவின் பாலி
Monday April-04 2022

நிவின் பாலி நடிப்பில், அப்ரித் ஷைனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மஹா வீர்யார்’. 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அப்ரித் ஷைனியும் இணைந்துள்ளனர்.

 

பாலி ஜே.ஆர் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் சாப்ரில் நிவி பாலி, பி.எஸ்.சம்னாஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில்  ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா பி அம்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

விருது பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாகும் இப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கு நிறைந்த படமாகவும் உருவாகிறது.

 

இஷான் சாப்ரா இசையமைக்கும் இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு கோவிந்த ஒலிக்கலவை கவனிக்க, அனீஸ் நாடோ கலையை நிர்மாணித்துள்ளார்.

 

மிகபிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், நடிகர் நிவின் பாலி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

Related News

8134

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery