Latest News :

யோகி பாபுக்கு ஜோடி லட்சுமி மேனனா? - இயக்குநர் விளக்கம்
Monday April-04 2022

லட்சுமி மேனன் மற்றும் யோகி பாபு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மலை’. இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஐ.பி.முருகேஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிட். நிறுவனம் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்ய, பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ஐ.பி.முருகேஷ் கூறுகையில், “இந்தப் படம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது, மலை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும். இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார், அந்த கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது , நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், லட்சுமி மேனன், யோகிபாபு இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வு இப்படத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது, மேலும் காளி வெங்கட் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும்,  சிங்கம்புலி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடன் மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

 

இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் யோகி பாபு ஜோடியாக நடிக்கவில்லை என்பதை உறுதி படுத்தினார், ஆனால் இருவரின் கதாபாத்திரம் திரையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.” என்றார்.

Related News

8135

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery