கிச்சா சுதீப்பின் நடிப்பில் ஃபேண்டஸி மற்றும் சாகச திரைப்படமாக உருவாகும் ‘விக்ராந்த் ரோனா’ பிரம்மாண்டமான பன்மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் டீசரை சூப்பர்ஸ்டார்களான சல்மான் கான், சிரஞ்சீவி, மோகன்லால், சிம்பு மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் வெளியிட்டனர்.
ஜீ ஸ்டுடியோஸ் வழங்க ஷாலினி ஆர்ட்ஸ் சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்வெனியோ ஆரிஜின்ஸ் (Invenio Origins) சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பை கவனிக்கிறார்.
அனுப் பண்டாரி இயக்கும் இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘விக்ராந்த் ரோனா’ வரும் ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...