‘கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ போன்ற படங்களை இயக்கிய பிரியா.வி, எழுதி இயக்கியிருக்கும் இணைய தொடர் ‘ஆனந்தம்’. நடிகர் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்தொடரில் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது. அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் இத்தொடரின் கதை.
ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் தயாரிக்கும் இத்தொடரின் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்த ஜெயராமன், ரீமா ரவிச்சந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர். பிரியா.வி மற்றும் ராகவ் மிர்தாத் வசனம் எழுத, பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.எஸ்.ராம் இசையமைக்க சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார்.
மொத்தம் 8 பாகங்களை கொண்ட ‘ஆனந்தம்’ இணைய தொடர் ஜீ5 ஒரினலாக வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...