தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசை மக்களும் கண்டுக்கொள்வதில்லை, அரசும் மக்களை கண்டுக்கொளவதில்லை. இதற்கிடையே, இந்த அரசு கலைகிறதோ அல்லது நான்கு வருடம் ஆண்டு முடிக்கிறதோ, அடுத்த தேர்த்தல் வந்தால், நிச்சயம் அதிமுக-வுக்கு வாக்குகள் இல்லை, என்பதை இப்போதே தீர்மாணித்துவிட்ட தமிழக மக்கள், தங்களது அடுத்த முதல்வராக சிலரை தேர்வு செய்து வைத்துள்ளனர்.
இந்த சிலரில் சினிமா பிரபங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் முக்கிய இடத்தில் இருக்க, இவர்களுக்கு போட்டியாக விஷாலும் வருவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே தனது அரசியல் ஆசையை வெளிக்காட்டிய விஜய் பிறகு அமைதியானாலும், தற்போதும் சமூக பிரச்சினைகளில் தலையீட்டு தன்னால் முடிந்ததை செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றது, மாணவி அனிதா குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறியது, பண இழப்பு மதிப்பு கருத்து வெளிப்படையாக தனது கருத்தை சொன்னது, என்று விஜயின் அதிரடி தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும், என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சட்டமா? நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்குவ் அரலாம். என்னை பொருத்தவரை நடிகர் விஜய் முதல்வராக வரலாம். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மெண்ட்டாகவே செய்கிறார். அதையும் தாண்டி அவர் நல்லெண்ணம் கொண்டவர். எவன்வே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.” என்று கூறியுள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...