Latest News :

ஒன்றரை ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ‘கேப்டன்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸானது
Monday April-04 2022

’டெடி’ படத்தை தொடர்ந்து ஆர்யா - இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘கேப்டன்’. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

 

ஆர்யா துப்பாக்கியுடன் நிற்க அவர்  பின்புறம், வித்தியாசமான மிருகன் ஒன்று இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது. 

 

நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த பர்ஸ்ட் லுக்கை உருவாக்க,  படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை  அடைய, ஒவ்வொரு மூலக்கூறும்  பிக்சல்கள்  மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த பர்ஸ்ட்லுக் உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை  பார்வையாளர்களுக்கு தரவேண்டும் என்பதே ஆகும்.  தவிர, இந்த சிங்கிள் ப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது, ரத்தம் சூடுபிடிக்கும் பரபர திரில்  சவாரியாக இப்படம் இருக்கும். 

 

இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு,  தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்யா எனும் அற்புதமான நடிகர் 'கேப்டன்' படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக்குழுவும் சொல்லி வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட படக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

 

திங் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

 

Captain

 

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கார்கி எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, எஸ்.எஸ்.மூர்த்தி கலையை நிர்மாணித்துள்ளார். வி.அருண்ராஜா கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஹெட்டாக பணியாற்றுகிறார்.

 

நடிகர் ஆர்யாவின் முந்தைய படங்களான சார்ப்பட்டா பரம்பரை மற்றும் டெடி ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதால், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related News

8140

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery