Latest News :

காதல் சுகுமார் நாயகனாக நடிக்கும் ‘தொடாதே’
Monday April-04 2022

பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் 'போதையில் செய்து விட்டேன்' என்பதே அவர்களின் வாக்குமூலமாக இருக்கிறது. நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை மக்கள் புரிந்து, குறைந்த பட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் அலெக்ஸ் ’தொடாதே’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ளார்.

 

நடிகர் 'காதல்' சுகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, பிஆர்ஓ கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார்.

 

கொடைக்கானல் ,மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இயல்பான கதை மாந்தர்களுடன் மண்ணின் மணம் மாறாமல் "தொடாதே" படமாகி இருக்கிறது. குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பமில்லாமல் தொடாதே, போதைப் பொருட்களை தொடாதே எனும் கருத்தை மையமாக வைத்து திரைக்கததை அமைத்திருக்கிறார் இயக்குநர் அலெக்ஸ்.

 

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடும், அதை தொடர்ந்து திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

Related News

8141

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery