Latest News :

விஜயின் 66 வது படம் பூஜையுடன் தொடங்கியது
Wednesday April-06 2022

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. 

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில்  விஜய் நடிக்கும் 66வது படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

 

இந்த படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்புமே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவே செய்கிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

 

அதேசமயம் திறமையான தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்திற்காக கைகோர்த்துள்ளனர். குறிப்பாக ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசை க்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்காக அருமையான பாடல்களை தர இருக்கிறார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தளபதி விஜய்க்காக முதன்முறையாக இதுபோன்ற ஒரு புதிய கதையை புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளார்.

 

இந்த படத்தின் கதையை வம்சி பைடிப்பள்ளியுடன் ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் இணைந்து உருவாக்கியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.

 

Vijay 66

 

இந்த இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்ரீ ஹர்ஷிதி ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்சிதா ஆகியோர் பொறுப்பு வகிக்க, சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி இருவரும் தயாரிப்பு மேற்பார்வையை ஏற்றுக் கொண்டுள்ளனர்

 

அந்த வகையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடனும் உருவாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இப்படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related News

8142

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery