Latest News :

ஜீ5 தளத்திற்காக வெற்றிமாறன் இயக்கும் வெப் தொடர் அறிவிப்பு!
Wednesday April-06 2022

பல வெற்றி திரைப்படங்களையும், சுவாரஸ்யமான இணைய தொடர்களையும் ரசிகர்களுக்கு வழங்கி வரும் ஜீ5 தளத்தில் மேலும் பல பிரம்மாண்ட தொடர்கள் வர உள்ளது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இயக்க, முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

 

இந்த புதிய தொடர்களைப் பற்றிய அறிவிப்பு நிகழ்ச்சி ஒன்றை மிக பிரம்மாண்டமான முறையில் ஜீ5 நிறுவனம் சென்னையில் நடத்தியது. இதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துக்கொள்ள, இவர்களது முன்னிலையில் புதிய தொடர்கள் வெளியிடப்பட்டது.

 

நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் ’விலங்கு’ தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர்.

 

ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  ’ஒரு ஆசம் தொடக்கம்’ நிகழ்ச்சியில் தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் பங்குகொள்ளும் இந்த படைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

 

தமிழின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர்  ’நிலமெல்லாம் ரத்தம்’ எனும்  ஜீ5 பிரத்யேக தொடரை அறிவித்தார்.  இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில்  ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர்,  நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரில்லர் தொடர் “கார்மேகம்” மற்றும் அரசியல் டிராமாவான  “தலைமை செயலகம்” ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இளைஞர்கள் இதயம் வென்ற காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

 

Zee 5

 

இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குனர் விஜய்யின் டீன் ஏஜ் டான்ஸ் டிராமா ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எயிட்,  வசந்த பாலன் இயக்கத்தில் ' தலைமை செயலகம்' , எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ‘கொலைகார கைரேகைகள்’, நாகா  இயக்கத்தில் ஒர த்ரில்லர் 'ஐந்தாம் வேதம்' , ஆகியவையுடன் மற்றும் பல ஆர்வமூட்டும் படைப்புகளான ‘அல்மா மேட்டர், ‘அயலி’ மற்றும் அருண் விஜய்,  ப்ரியாபவானி சங்கர் நடிக்கும் ‘யானை’ , விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட் மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படங்களும் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அனைவரது பார்வையும் ஜீ5 இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல்  தொடரான ‘விலங்கு’ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மீதும், பெரு வெற்றி பெற்ற  மலேசியா டூ அம்னீஷியா மற்றும் விநோதயா சித்தம் படங்களின் குழுவினர் மீதுமே  இருந்தது.

 

வலுவான தமிழ் கதைகளை வழங்கி வருவதன் மூலம் தமிழில் முன்னணி  இடத்தை பிடித்திருக்கும் ஜீ5, இந்தியாவின் பல மொழி பொழுதுபோக்கு தளமாக அதன் நிலையை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட சூப்பர்ஸ்டார் அஜித்தின் ‘வலிமை’ உலகளவில் வேகமாக 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைப் பெற்று மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Related News

8143

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery