‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘டான்’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.
இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, விஜே விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.சி ஆகியோர் இருந்தனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...