Latest News :

’புஷ்பா’ படத்தை தொடர்ந்து ‘வெப்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய அசத்தல் பாடல்
Wednesday April-06 2022

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா...” பாடலை தொடர்ந்து ஆண்ட்ரியா ‘வெப்’ திரைப்படத்தில் அசத்தல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

 

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

 

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர்  ஹாரூன்.

 

சமீபத்தில் 'புஷ்பா' படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ”ஓ சொல்றியா மாமா..” பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா 'வெப்' படத்துக்காக, “வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்.. வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..இரவு முடியும் வரை... நீ ஆடு..” எனும் பப் பாடலை பாடியுள்ளார். பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

 

Andrea

 

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியீடும் அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related News

8147

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery