மாநாடு, மன்மத லீலை என்று அடுத்தடுத்த இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்காக நாக சைதன்யாவுடன் இணைகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
நாக சைதன்யாவின் 22 வது படமாக உருவாகும் இப்படம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 11 வது படமாகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தை, பவன் குமார் வழங்குகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாக சைதன்யா அறிமுகமாகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படம் பற்றிய மற்ற விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...