பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டிக்கு வெளியே’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் ‘உலகம்மை’. திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ் இயக்குகிறார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ.ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
நெல்லை மாவட்ட பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகர்கள் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்,சாமி,ஜெயந்திஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர்இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் கல்லூரி நாட்களிலேயே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
“அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன். என்று அவர் கூறினார்.
உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது.
சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த நான்கு பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும். பேராசிரியர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும் வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர். பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இளையராஜா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...