விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘கொலை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் துப்பறியும் நபராக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’விடியும் முன்’, மற்றும் ’9 லைவ்ஸ் ஆஃப் மாறா’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி குமார் 'கொலை' படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிருவனம் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா, எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, லோட்டஸ் பிக்சர்ஸ் சித்தார்த்தா சங்கர், அசோக் குமார் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் பாலாஜி குமார் கூறுகையில், “’கொலை திரைப்படம் 1923 இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்க உலகம் துடித்தது. இப்படத்தின் இறுதி திரைக்கதை பிரதிக்கு முன் 30 மாதிரி வரைவுகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது, கதையை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற இந்த தேவை இருந்தது. கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது மேல்தட்டு குடியிருப்பில் கொலை செய்யப்படுகிறார். அவளுக்குத் தெரிந்த ஐந்து ஆண்களில் , ஒவ்வொருவரும் லீலா இறக்க வேண்டி விரும்புவர்களாக இருக்கிறார்கள். அதில் கொலையாளி யார் என்பது மர்மம். துப்பறியும் நபரான விநாயக் பல ஆண்டுகளாக தனிப்பட்ட சோகத்தால் களப்பணிகளில் இருந்து விலகி, முடங்கி இருக்கிறார். இந்த கொலை வழக்கு சிக்கலானதாக இருப்பதால், காவல்துறைக்கு வேறு வழிகள் இல்லை, கொலை மர்மத்தை உடைக்க அவரை மீண்டும் கொண்டு வர வேண்டும். மர்மத்தைத் தீர்க்கும் வல்லவராக அவர் இருக்கிறார். ரித்திகா சிங் இப்படத்தில் சந்தியாவாக நடிக்கிறார், அவர் தனது உயரதிகாரியான விநாயகின் கீழ் வேலை செய்து வழக்கின் மர்மங்களை கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும்.” என்றார்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கோபாலாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...