’மெட்ராஸ்’, ’ரைட்டர்’ படங்கள் மூலம் பாராட்டு பெற்ற ஹரிகிருஷ்ணன், ‘ஜெய் பீம்’ படம் மூலம் பாராட்டு பெற்ற லிஜோமோல் ஜோஸ், பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘அண்ணபூரணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கே.எச்.பிக்சர்ஸ் சார்பில் ஹரி பாஸ்கர் மற்றும் ODO பிக்சர்ஸ் சார்பாக நேதாஜி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை லயோனல் ஜோசுவா இயக்குகிறார். திரில்லர் டிராமாவாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். அமரன் கலையை நிர்மாணிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...