எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வ்ளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
உலகம் முழுவதுமே ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்தது.
இந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ரூ.1000 கோடி வசூலித்து சாதனையை தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இதை கொண்டாடும் வகையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் மும்பையில் விழா ஒன்றை நடத்தினார்கள்.
‘ஆர்.ஆர்.ஆர்’ ரூ.1000 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது போல், இயக்குநர் ராஜமவுலியின் படம் இரண்டாவது முறையாக ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன் பாகுபலி 2 படம் உலகளவில் ரூ.1800 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...