Latest News :

இதயத்தை வருடும் ’ஓ மை டாக்’! - ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ்
Saturday April-09 2022

தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் 2டி நிறுவனத்தின் மற்றொரு தரமான படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார், வினய் ராய் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வருக் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஜோதிகாவும் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில்,  ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், எஸ் ஆர் ரமேஷ் பாபு ஆகியோர் ஆர். பி டாக்கிஸ் சார்பாக இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

 

படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில், டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான - வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை நான் உணர்ந்தேன். இந்தத் திரைக்கதையில் ஏராளமான உணர்வுகள் இடம்பெற்றிருந்தன. பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது. தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்தப்படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன்.” என்றார்.

 

Oh My Dog

 

ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக 'ஓ மை டாக்' உருவாகி இருக்கிறது. அர்ஜுன் மற்றும் அவரது நாய்க்குட்டி சிம்பாவை பற்றிய இதயத்தை வருடும் கதை. ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் விரும்பி பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படம் இது. குழந்தைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளின் உலகத்தில்.. அவர்களின் ஆசைகள், முன்னுரிமை, அக்கறை, துணிச்சல், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற அன்பு, விஸ்வாசம் ஆகியவை குறித்து இந்த திரைப்படம் ஆராய்கிறது.

 

ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரத்யேகமாக உலகளாவிய பிரிமியரில் ஃபேமிலி என்டர்டெய்னராக வெளியாகும்  'ஓ மை டாக்' கோடை விடுமுறை கொண்டாட்டத்தை குடும்பத்தோடு கொண்டாடுவதற்கான சரியான திரைப்படமாக இருக்கும்.

Related News

8157

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery