‘தமிழ் படம் 2, ‘நான் சிரித்தால்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்வர்யா மேனன், தெலுங்கு சினிமாவிலும் பிஸியாகியிருக்கிறார்.
யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன், இளம் நடிகர் நிகில் நடிப்பில், இடி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி தெலுங்கு சினிமாவில் பிஸியாகியுள்ள ஐஸ்வர்யா மேனன், சில தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அது பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்க இருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...