Latest News :

ஹன்சிகா நடிக்கும் இணைய தொடர்!
Sunday April-10 2022

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த ஹன்சிகா முதன் முதலாக இணைய தொடர் ஒன்றில் நடிக்கிறார். ’சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கும் இந்த தொடரில் ஹன்சிகாவுடன் முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

 

ட்ரெண்ட் லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். 

 

‘மை3’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த வெப் தொடரின் தலைப்பை நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிகர் முகேன் ராவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் இணைந்து இன்று வெளியிட்டனர்.

 

இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறுகையில், “இந்த தொடரில் பங்குகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் பணிபுரிவது மிக இனிமையான அனுபவம், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. உலகளவில் பிரமாண்ட படைப்புகளை தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நிறுவனத்தில் நானும் பங்கு பெறுவது பெருமை. இது என்னுடைய முதல் இணைய தொடர்.  நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள். எங்கள் தொடரின் தலைப்பை தமிழகத்தின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சியில் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை  தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்கு நன்றி.” என்றார்.

 

Mi3

 

இயக்குநர் ராஜேஷ்.எம் கூறூகையில், “இணைய தொடர் இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை  இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ‘மை3’ தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர்,  இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானது மகிழ்ச்சி. ” என்றார்.

 

நடிகர் முகேன் ராவ் கூறுகையில், ”நான் இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படங்களின் பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களைப் பார்த்து மனதார சிரித்திருக்கிறேன், அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்பினேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் சாருடன் கைகோர்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எனக்கு வழங்கிய வாய்ப்பைப் பெற்றேன். மேலும் அவருடன் பணிபுரிவது ஒரு இனிமையான அனுபவம். இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நன்றி. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.” என்றார்.

 

தற்போது ஆரம்பக் கட்டப்பணியில் இருக்கும் ‘மை3’ வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதோடு, தொடரின் முழுமையான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்க உள்ளது.

Related News

8159

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery