Latest News :

சதீஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சிலம்பரசன்
Monday April-11 2022

காமெடி நடிகராக வலம் வந்து தற்போது காமெடி ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கும் சதீஷ், ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் காமெடி ஹீரோவாக இல்லாமல் சீரியஸ் ஹீரோவாக களம் இறங்குகிறார். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சதீஷ் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் வெளியிட்டார்.

 

க்ரிஷ் இண்டர்நேஷ்னல் பிலிம் கிரியேஷன், சீட்ஸ் எண்டர்டைன்மெண்ட் மற்றும் சண்முகம் கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘சிக்சர்’ படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார்.

 

படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறுகையில், “பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை, நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார், அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாறிவிடும். நடிகர் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் திரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிலம்பரசன் TR அவர்களை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ” என்றார்.

 

Sattam En Kaiyil

 

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, என்.கே.ராகுல் கலையை நிர்மாணிக்கிறார்.

Related News

8161

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery