தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பற்றி அவ்வபோது சர்ச்சை தகவல்கள் பரவி வருவதோடு, சில ஆச்சரியமான அதே சமயம் அதிர்ச்சிகரமான தகவல்களும் உலா வருகின்றது.
அந்த வகையில், நயன்தாராவின் சம்பலம் விஷயம் தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று ஒட்டு மொத்த கோலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமான இப்படத்தில் நயன்தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும், வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே நயன்தாரா கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அதற்கு இத்தனை கோடிகள் சம்பளமா!, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிச்சியாக, கூடவே மற்றொரு அதிர்ச்சி தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெயம் ரவிக்கே நயன்தாராவை விட குறைவான சம்பளம் தான் பேசப்பட்டிருக்கிறதாம்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...