Latest News :

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் ‘தி வாரியர்’ படத்தில் பாட்டு பாடிய சிம்பு
Monday April-18 2022

இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் ’தி வாரியர்’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார்.  

 

“புல்லட்” பாடலை தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், இந்த பாடல் ஒரு சக்திமிக்க பாடலாக, கேட்பவர் ரசிக்கும் விதமாக இருக்கும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளனர்.

 

ராம் பொத்தினேனி, லிங்குசாமி மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் உடைய நண்பரான நடிகர் சிம்பு தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது அவரது சிறப்பான பங்களிப்பை ‘தி வாரியர்’ படத்தின் புல்லட் பாடலுக்கு அளித்துள்ளார்.

 

இந்த மாஸ் பாடல் படத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கும், இப்படம் ஜூலை 14 உலகமெங்கிலும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது.  

 

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி , தி வாரியர் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.

 

RAPO19 என அழைக்கப்பட்ட படத்தன் பெயர் மற்றும் டைடில் லுக் சமீபத்தில் போஸ்டருடன் வெளியிடபட்டது. போஸ்டரில் ராம் பொத்தினேனி, போலீஸ் ஆபிசர் உடையில், காவலர்கள் சூழ துப்பாக்கியுடன் இருக்க, தி வாரியர் என்ற தலைப்புடன்  போஸ்டர் வெளியிடப்பட்டது.

 

காதலர் தினத்தன்று, படத்தின் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி உடைய பர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14 அன்று வெளியானது. விசில் மஹாலட்சுமி என்ற பெயரில் ட்ரெண்டியான லுக்கில் கிரித்தி ஷெட்டி அதில் இடம்பெற்றிருந்தார். மகா சிவராத்திரி அன்று நடிகர் ஆதி உடைய பர்ஸ்ட் லுக் வெளியானது.

 

படம் குறித்து படக்குழு கூறியதாவது, “இப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு, தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியமான காவல்துறை பற்றிய கதையாக இருக்கும். ஐஸ்மார்ட் சங்கர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் ‘தி வாரியர்’. இப்படத்தில் அக்‌ஷரா கௌடா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.” என்றனர்.

 

Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார், ‘தி வாரியர்’ திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தின், சீட்டிமார் என்ற ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாக இருக்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றனர்.

Related News

8170

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery