Latest News :

‘ஓ மை டாக்’ படத்தின் மிகப்பெரிய சவால்! - மனம் திறந்த அருண் விஜய்
Monday April-18 2022

அருண் விஜய், அவரது மகன் ஆர்ணவ் விஜய் மற்றும் அவரது அப்பவும் பிரபல நடிகருமான விஜயகுமார் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிக்கும் படம் ‘ஓ மை டாக்’. அமேசான் ஒரிஜினலாக வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, குழந்தைகளை வெகுவாக கவர்ந்து, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. 

 

நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் சரவ் சண்முகம் கூறும்போது, இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம் என்றனர். 

 

100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய் கூறுகையில், “இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெயர்னர் ராஜவிற்கு ஒரு பெரிய நன்றி.  மேலும்  இயக்குனர் சரவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியது எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி.” என்றார்.

 

இயக்குநர் சரோவ் சண்முகம் கூறுகையில், “நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படபிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம். இந்த கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம். ட்ரெயர்னர் ராஜா , நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார், அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம், நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்க சொன்னேன். இது உலகம் முழுக்க உள்ள ஒரு சாம்பியன்ஷிப் போட்டி. அது இங்கும் நிகழ்கிறது. ஓ மை டாக் திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டி சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பை கூறும் ஒரு உணர்வு பூர்வமான கதை. அர்ஜூன், சிம்பாவை சந்திக்கிறான், அது அவனை காப்பாற்றுகிறது, அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான். பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களை கடந்து, வெற்றிப்பாதையை அடைகிறார்கள்.” என்றார்.

 

ஜோதிகா - சூர்யா தயாரிக்கும் ‘ஓ மை டாக்’படத்தின் இணை தயாரிப்பை ராஜ்செகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் ஆர்.பி டாக்கிஸின் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு ஆகியோர் கவனிக்கிறார்கள். நிவாஷ் பிரசன்னா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Related News

8173

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery