Latest News :

பான் இந்திய பிரமாண்ட திரைப்படமாக உருவாகும் ‘ஸ்பை’!
Tuesday April-19 2022

வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தாவின் நடிப்பில் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமாக ’ஸ்பை’ உருவாகிறது. நிகில் சித்தார்த்தாவின் 19 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘கோதாச்சாரி’, ‘எவரு’, ‘ஹிட்’ போன்ற படங்களின் தொகுப்பாளர் கேரி பி.எச் இயக்குகிறார். இடி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கே.ராஜசேகர் ரெட்டி மற்றும் சரண் தேஜ் உப்பலாபதி இணைந்து தயாரிக்கின்றனர்.

 

நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.  இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட்  மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக  நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன்  நடந்து வருவது  ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே  தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.

 

நிக்கிலின் முதல் பான் இந்திய படமாக ஸ்பை படம் உருவாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்படத்தில் நிகில்  முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார், இந்தப் படம் 2022 ஆண்டு தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில்  வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை வெளியிடும்போது " 2022 தசரா பண்டிகையில் திரையரங்குகளை தாக்க வருகிறது " என்று வெளியிட்டு இதனை படக்குழு உறுதிபடுத்தியுள்ளனர்.

 

இந்தப் படத்தின் கதையை இதன் தயாரிப்பாளர் கே.ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார், இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை இயக்குனர் கேரி BH அவர்களே  மேற்கொண்டுள்ளார், மேலும் ஐஷ்வர்யா மேனன் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.  இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று  படக்குழு தெரிவித்துள்ளனர்.

 

இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில்  பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது, அதற்காக படக்குழுவினர்  தொழில்நுட்ப  குழுவை  வலுவாக அமைக்க திட்டமிட்டுள்ளனர், தற்போது இந்த படத்தில் ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா இணைந்துள்ளார், மேலும் சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் ஸ்டண்ட் டீம் கொண்டு உருவாக்குவதாக படக்குழு கூறியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கின்றார். அர்ஜுன் சுரிசெட்டி இந்தப் படத்தின் கலை இயக்குனராக பணிபுரிகிறார், மேலும் ரவி அந்தோனி புரொடக்சன் டிசைனராக பணியாற்றுகின்றார்.

 

Spy

 

படத்தின் புரடக்சன் பணிகளை இடி எண்டர்டெயின்மெண்ட்  சார்பில்  சிஇஓ  சரண் தேஜ் உப்பலபதி மேற்கொள்கிறார், இந்தப் படம் தவிர மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதில் ஒன்று ’டி ஜே தில்லு’ படம் மூலம் பிரபலமான இயக்குநர் விமல் கிருஷ்ணாவை வைத்து உருவாக்கப் போவதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Related News

8174

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery