நானி, நஸ்ரியா நசீம் இணைந்து நடித்திருக்கும் படம் ‘அன்டே சுந்தரனக்கி’. விவேக் ஆத்ரேயா இயக்கியிருக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற தலைப்பில் வெளியாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்ற வேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.
இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.
இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் பிரத்யேக முத்திரை அவரது எழுத்திலும், இயக்கத்திலும் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது. மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு என்பதால் இந்தப்படத்தின் தரம் முதன்மையானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
நானியின் பிரத்தியேக வசன உச்சரிப்பு, இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது. அதே தருணத்தில் நடிகை நஸ்ரியா நசீம் உடனான அவரது கெமிஸ்ட்ரி, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நானி மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நகைச்சுவை பகுதியை சிறப்பித்திருக்கிறார்கள். ரவிதேஜா கிரிஜாலா இப்படத்தை தொகுத்திருக்கிறார்.
இந்தப்படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும் ஜூன் 10 ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...